மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய 24 -ந் தேதி சிறப்பு முகாம்
- மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது.
- வருகிற 24-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மோகனூர் ரோட்டில் கூட்டுறவு காலனியில் அமைந்துள்ள நாமக்கல் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது . இது குறித்து நாமக்கல் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மின் விநியோக கோட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல் நகரம், வளையப்பட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதன்சந்தை, புதுசத்திரம், காளப்பராயப்பன்பட்டி, பேளுகுறிச்சி, கொல்லி மலை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மோகனூர் ரோட்டில் கூட்டுறவு காலனியில் அமைந்துள்ள நாமக்கல் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் வீடு மற்றும் கடைகள் மின் இணைப்புகளுக்கு வீட்டு வரி ரசீது, பத்திர நகல் , வாரிசுதாரிடம் இருந்து ஆட்சேபனை இன்மை கடிதம் கொண்டு வரவேண்டும். விவசாய மின் இணைப்பு–களுக்கு பத்திர நகல் அல்லது பட்டா, கிராம நிர்வாக அலுவலரின் உரிமை சான்று, புலவரைபடம், தாழ்வழுத்த ஒப்பந்த பத்திரம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
தொழில்துறை மின் இணைப்புகளுக்கு தாழ்வ–ழுத்த ஒப்பந்த பத்திரம், சொத்து வரி ரசீது, பத்திர நகல் போன்ற சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பெயர் மாற்றம் செய்து பயனடையலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.