உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

தனிமனை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது

Published On 2022-06-21 15:36 IST   |   Update On 2022-06-21 15:36:00 IST
  • தனிமனை உரிமையாளர்கள் பங்கேற்று, தங்கள் மனைகளை வரன்முறை செய்து கொள்ளலாம்.
  • டி.டி.சி.பி., அனுமதி பெறுவதற்கான தொகை ரூ.500ஐ, வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

அவிநாசி :

அவிநாசி ஊராட்சி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாளை 22ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4மணி வரை, செம்பியநல்லூர் பிரசன்ன வாசுகி மஹால் கட்டடத்தில் தனிமனை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. நகர ஊரமைப்பு துறையால் மனைப்பிரிவு வரைபட அங்கீகாரம் வழங்கப்பட்ட மனைப்பிரிவுகளில் கடந்த 2016, அக்டோபர் 20ந் தேதிக்கு முன் விற்பனை செய்யப்பட்டு, வரன்முறைப்படுத்தப்பட வேண்டிய தனிமனை உரிமையாளர்கள் பங்கேற்று, தங்கள் மனைகளை வரன்முறை செய்து கொள்ளலாம்.

டி.டி.சி.பி., அனுமதி பெறுவதற்கான தொகை ரூ.500ஐ, வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். கடந்த 2016, அக்டோபர் 2010க்கு முன் விற்பனை செய்யப்பட்ட கிரயப்பத்திரம், நடப்பு தேதியில் பெறப்பட்ட வில்லங்க சான்று, ஆதார் அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News