உள்ளூர் செய்திகள்

ஆரூர்பட்டியில் சிறப்பு முகாம் நடந்தபோது எடுத்த படம்.

ஆரூர்பட்டியில் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

Published On 2022-11-16 13:00 IST   |   Update On 2022-11-16 13:00:00 IST
  • வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு அந்தந்த வாக்கு சாவடிகளில் முகாம் நடைபெற்றது.
  • தொடர்ந்து வருகிற 19,20 ஆகிய தேதிகளிலும் முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாரமங்கலம்:

தமிழக தேர்தல் ஆணையம் மூலமாக கடந்த 13,14 ஆகிய தேதியில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு அந்தந்த வாக்கு சாவடிகளில் முகாம் நடைபெற்றது.

தொடர்ந்து வருகிற 19,20 ஆகிய தேதிகளிலும் முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தார–மங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆரூர்பட்டி ஊராட்சியில் புதிதாக வீட்டு மனைகள் ஒதுக்கி தற்போது நரிகுறவர்கள் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கபட்டது. தற்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவின் பேரில் நரிகுறவர்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுக்கு என்று வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

தேர்தல் துணை தாசில்தார் கருணாகரன் தலைமையில் நடந்த முகாமில் 110 வாக்காளர்களுக்கு முகவரி மாற்றம் செய்தும், புதிதாக 5 பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். அப்போது தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அதிகாரி கலை செல்வி ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள் காங்கேயன் நரிகுறவர் குடும்ப தலைவர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News