உள்ளூர் செய்திகள்

அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக சிறப்பு பஸ்கள்

Published On 2023-11-11 14:35 IST   |   Update On 2023-11-11 14:35:00 IST
  • கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
  • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கபடும்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளை தீபாவளி பண்டியையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, அவரவர் சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு பயணம் செய்ய ஏதுவாக கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொ ண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய  இடங்களிலிருந்து சென்னைக்கு நாளை 50 கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.

13-ந் தேதி 500 கூடுதல் பஸ்களும், 14-ந் தேதி 250 கூடுதல் பஸ்களும், மேலும் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய  ஊர்களிலிருந்து மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நாளை 100 கூடுதல் பஸ்களும், 13 மற்றும் 14-ந் தேதிகளில் 200 கூடுதல் பஸ்களும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை யொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து திரும்பி செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டு க்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்த ப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News