உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன்.

நாட்டு மடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2023-02-14 12:32 IST   |   Update On 2023-02-14 12:32:00 IST
  • தினசரி பூஜைகள் முக்கிய திருவிழாக்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
  • அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை.

வேதாரண்யம்:

வேதாரண்யம்நகரில் நாட்டு மடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவி லில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

மேலும், தினசரி பூஜைகள் முக்கிய திருவிழா க்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

மேலும், ஒவ்வொரு தமிழ் மாத கடைசி ஞாயிற்றுக்கி ழமைகளில் பக்தர்கள் ஒன்றுகூடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்துவது வழக்கம்.

அதன்படி, நேற்று முன்தினம் தை மாத கடைசி ஞாயிற்று கிழமையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்க ப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News