உள்ளூர் செய்திகள்

வில்லிபாளையம் ஊராட்சியில் மண், நீர் பரிசோதனை முகாம்

Published On 2022-06-30 08:14 GMT   |   Update On 2022-06-30 08:14 GMT
  • பரமத்தி வட்டாரம் வில்லிபாளையம் கிராமத்தில் நடமாடும் மண்பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
  • நீர் மாதிரிகளை கொண்டு வந்து பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பரமத்திவேலூர்:

பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:- பரமத்தி வட்டாரம் வில்லிபாளையம் கிராமத்தில் நடமாடும் மண்பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

அது சமயம் வில்லிபாளையம் ஊராட்சி, ஜங்கமநாய்க்கன் பட்டி, குச்சிப்பாளையம் கிராமம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள மண் மற்றும் நீர் மாதிரிகளை கொண்டு வந்து பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சவுந்தர்ராஜன் மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு ஆகியோர் "மண் மற்றும் நீர் மாதிரி எடுக்கும் முறை, மண் மற்றும் நீர் பரிசோதனையின் மூலம் பெறப்படும் பலன்கள், மண்வள அட்டையின் சாராம்சம் குறித்து விளக்கமளிக்கவுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு பரமத்தி உதவி வேளாண்மை அலுவலர் ரகுபதியை தொடர்பு கொண்டு பயன் பெறமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News