உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரியை படத்தில் காணலாம்.

விழுப்புரம் அருகே ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தல்

Published On 2023-09-10 13:16 IST   |   Update On 2023-09-10 13:16:00 IST
  • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • 708 கிலோ போதைப் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதை கண்டறிந்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போலீஸ் எல்லைக்குட்பட்ட நடுக்குப்பம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுராந்தகம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கோபால் மகன் பழனி (வயது 40), தண்டலம் அப்துல்கலாம் தெருவை சேர்ந்த முனிநாதன் மகன் சத்தியமூர்த்தி (38) ஆகிய இருவரும் மினி லாரியில் குட்கா, கூல் லிப் உள்ளிட்ட 708 கிலோ போதைப் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதை கண்டறிந்தனர். 2 வாலிபர்களையும் கைது செய்த போலீசார், கடத்தி வரபரபட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News