இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வேலைவாய்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட சிறப்பு முகாம் நடைபெற்றது.
இளைஞர்களுக்கு திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம்
- ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது.
- முகாமில் 5 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு இலக்கு அடையும் பொருட்டு இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வேலைவாய்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட சிறப்பு முகாம் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது.
இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ராஜா முகாமை தொடங்கி வைத்தார். முகாமிற்கு 18 வயதிலிருந்து 35 வயது வரை ஊராட்சியிலிருந்து தகுதியுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் 5 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். முகாமில் துணை தலைவர் ராதிகா பாஸ்கரன், மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, ஊராட்சி செயலர் திருமால்வளவன் வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.