உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் மரிய சூசை பரிசு வழங்கிய காட்சி.

நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஸ்கேட்டிங் போட்டி

Published On 2023-01-23 14:50 IST   |   Update On 2023-01-23 14:50:00 IST
  • யோகா மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் லிட்டில் பிளவர் பள்ளியில் நடைபெற்றது.
  • விளையாட்டு போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

நெல்லை:

நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் யோகா மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் பேட்டை கோடீஸ்வரன் நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி சேர்மன் மரியசூசை தலைமை தாங்கினார். அமல் தாமஸ் முன்னிலை வகித்தார். அழகேசராஜா வரவேற்றார். பள்ளி முதல்வர் ரெனால்ட் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து யோகா மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 100 மாணவ-மாணவிகளுக்கு தேசிய இளைஞர் தின விருதுகள் மற்றும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட யோகாசன சங்கத்தின் அழகேச ராஜா செய்திருந்தார். முடிவில் சத்யா நன்றி கூறினார்.

Tags:    

Similar News