உள்ளூர் செய்திகள்

புதிய கட்டிட பணியை சிவபத்மநாதன் ஆய்வு செய்த காட்சி.


ஆலங்குளம் அரசு கல்லூரி புதிய கட்டிட பணியை சிவபத்மநாதன் ஆய்வு

Published On 2022-11-20 08:06 GMT   |   Update On 2022-11-20 08:06 GMT
  • கடந்த 3 ஆண்டுகளாக தனியார் பள்ளி கட்டிடத்தில் கல்லூரி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
  • புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே 13-ந் தேதி நடைபெற்றது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 3 ஆண்டுகளாக தனியார் பள்ளி கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆலங்குளம்- தென்காசி சாலையில் கழுநீர்குளம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் 16 ஏக்கர் நிலத்தில், புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.11.33 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே 13-ந் தேதி நடைபெற்று, தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப் பணிகளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலர் சிவபத்மநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கட்டிட பணிகளை தரமாக அமைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

கீழப்பாவூர் ஒன்றியக் குழுத் தலைவர் காவேரி சீனிதுரை, ஆலங்குளம் ஒன்றிய தி.மு.க. செயலர்கள் செல்லத்துரை, அன்பழகன், கீழப்பாவூர் ஒன்றிய தி.மு.க. செயலர் சீனிதுரை, கழுநீர்குளம் ஊராட்சித் தலைவர் முருகன், நகர செயலர்கள் ஆலங்குளம் நெல்சன், கீழப்பாவூர் ஜெகதீசன், தொழிலதிபர் மணிகண்டன் பொறி யாளர்கள் சரத்குமார், நல்லசிங் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News