உள்ளூர் செய்திகள்

கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் மெயின்ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் குடிநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

சிவானந்தபுரம் மெயின் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது: பொதுமக்கள் அவதி

Published On 2023-06-18 07:52 GMT   |   Update On 2023-06-18 07:52 GMT
  • அத்தியாவசிய தேவையான குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
  • குடிநீர் வீணாகி வருவதால் அடிப்படை தேவையை பொதுமக்கள் எப்படி சமாளிப்பார்கள்?

கடலூர்:

கடலூர் மாநகராட்சிக்குட்பட்டு 45 வார்டுகள் உள்ளன. இங்கு பொது மக்களுக்கு கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலையிலிருந்து ராட்சத குழாய் மூலம் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேமித்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் மூலம் கடலூர் - சிதம்பரம் சாலையில் குளம் போல் குடிநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீரில் சென்றனர். மேலும் அந்த பகுதியில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.\

இது மட்டும் இன்றி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 104 டிகிரி வெயில் அளவு பதிவான நிலையில் கடும் வெப்பம் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் அத்தியாவசிய தேவையான குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கடலூர் மாநகராட்சி சார்பில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வாகனங்கள் மூலமாக இலவசமாக குடிநீர் வழங்கி வந்தாலும், இதுபோன்ற குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வீணாகி வருவதால் அடிப்படை தேவையை பொதுமக்கள் எப்படி சமாளிப்பார்கள்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் குழாயை சரி செய்து பெருக்கெடுத்து சாலையில் வீணாக ஓடும் குடிநீரை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News