உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2023-04-11 09:03 GMT   |   Update On 2023-04-11 09:03 GMT
  • 49 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 331 மனுக்கள் பெறப்பட்டன.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமை யில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊன முற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்தி றனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 331 மனுக்கள் பெறப்பட்டன.

வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 16 பயனா ளிகளுக்கு பல்வேறு வகை யான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த முரளி என்பவர் தீ விபத்தால் இறந்ததையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சம் , காரைக்குடி வட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் நீரில் மூழ்கி இறந்ததையொட்டி அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

செபாஸ்டின் என்பவர் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த போது கொரோ னாவால் உயிரிழந்ததை யொட்டி, அவரது வாரிசு தாரரான மனைவிக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.5 லட்சம், தேவகோட்டை வட்டத்தைச் சார்ந்த ஜெகதீசுவரன் என்பவர் நீரில் மூழ்கி இறந்ததையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.1லட்சம் என மொத்தம் ரூ.8லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சாக்கோட்டை ஊராட்சியைச் சார்ந்த 10 மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி மொத்தம் ரூ.6 லட்சத்துக்கான காசோலை உள்ளிட்ட மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

Tags:    

Similar News