முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
- கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் ஒழுக்க விதிமுறைமற்றும் ஒழுக்கத்துடன் நடப்பது பற்றி விரிவாக பேசினார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் செயல்பட்டு வரும் நேஷனல் அகாடமி கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர், மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு விழா நடந்தது. ஆரத்தி எடுத்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளித்தனர்.
விழாவில் கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் ஒழுக்க விதிமுறைமற்றும் ஒழுக்கத்துடன் நடப்பது பற்றி விரிவாக பேசினார். நர்சிங் மாணவிகள் முதல் உதவி சிகிச்சை முறைகளை விளக்கி செயல் விளக்கம் அளித்தனர். கேட்டரிங் மாணவர்கள் சமையல் செய்யும் இடம் தகுந்த பாதுகாப்புடன், உடை சுத்தம், உடல் சுத்தம் பற்றி பேசினார்கள்.
ஏசி சர்வீஸ் பற்றி பயிலும் மாணவர்கள் எவ்வாறு ஏசியை பராமரித்தல் மற்றும் பாதுகாப்புடன் சர்வீஸ் செய்யும் முறைபற்றியும் விரிவாக விளக்கம் அளித்தனர்கள். எலெக்ட்ரிக், பேசன் துறையை சேர்ந்த மாணவர்கள் தங்களின் படிப்பு மற்றும் தொழில் முறைகள் குறித்து பேசினர்.நிகழ்ச்சி ஏற்பாடு ஆசிரியர்கள் மது மோனிஷா, பூவிழி, கனிமொழி, தன வேந்தன், செல்வா, பொன்னுசாமி, ஷாஜகான் செய்திருந்தனர்.ஆசிரியர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்கள்.