- திருப்பத்தூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தளக்காவூரில் புனித ஜெபமாலை மாதா ஆலய சப்பர திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி ஒய்.எம்.சி.ஏ கத்தோலிக்க இளைஞர் மன்றத்தால் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் பங்கேற்றன. 20 நிமிடங்களுக்குள் காளையை அடக்க வேண்டும் என்று விழா குழுவினரால் நேரநிர்ணயம் செய்யப்பட்டது.
இதில் 9 பேர் கொண்ட 15 குழுவினர் களம் இறங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதை பார்பதற்காக சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். விழாவில் காரைக்குடி வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் காயமடைந்த வீரர்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் முதலுதவி வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.