உள்ளூர் செய்திகள்

அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்

Published On 2023-10-24 08:42 GMT   |   Update On 2023-10-24 08:42 GMT
  • அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
  • தொழிலாளர்கள் தாங்களாகவே விவரங்களை htts://eshram.gov.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்க ளின் கீழ் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் மற்றும் 370 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பொதுசேவை மையங்களி லும், இ-சேவை மையங்க ளிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் தாங்களா கவே விவரங்களை htts://eshram.gov.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

கட்டுமான தொழிலா ளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகை தாரர்கள், பேக்கிங் செய்வோர், தச்சர்கள், கல்குவாரி தொழிலாளர்கள், மர ஆலை தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறு வியா பாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ேதாட்ட தொழிலாளர்கள், பால் வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் போன்ற வர்களின் விவரங்கள் இந்த தளத்தில் பதிவு செய்யப் பட்டு வருகிறது.

இதில் 16 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் தங்களது விவரங்களை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பின்னர் அவர்களுக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். அவர்கள் வேலை காரணங்களுக்காகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ புலம் ெபயர்ந்தாலும் அர சின் சலுகைகளை பெற இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம். தற்போது வரை சிவகங்கை மாவட்டத் தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 88 அமைப்புசாரா தொழி லாளர்கள் பதிவு செய்து உள்ளனர்.

தரவு தளத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலா ளர்களின் 31.3.2022-க்கு முன்பாக விபத்தில் உயிர் இழந்த தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம், விபத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் கருணை தொகையாக வழங்கப்பட உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் தரவுதளத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் 31.3.2022-க்குள் விபத்தி னால் உயிரிழந்திருந்தாலோ அல்லது ஊனமடைந்திருந்தா லோ அந்த தொழிலாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) அலுவலகத்தை அணுகி கருணை தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News