ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கும் விழா
- நெற்குப்பையில் ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது.
- நகர செயலாளரும், பேரூராட்சி சேர்மனுமான கே.பி.எஸ்.பழனியப்பன் சீருடை அடங்கிய தொகுப்பினை ஓட்டுனர்களுக்கு வழங்கினார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 19 வருடங்களாக ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தி.மு.க. மாவட்ட மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான
கே.ஆர்.பெரிய கருப்பன் தன் சொந்த நிதியிலிருந்து ஆயுத பூஜை தினத்தன்று சீருடை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் அமைச்சர் ஏற்பட்டில் இந்த வருடம் நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுனர்களுக்கு நகர செயலாளரும், பேரூராட்சி சேர்மனுமான கே.பி.எஸ்.பழனியப்பன் சீருடை அடங்கிய தொகுப்பினை ஓட்டுனர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் முத்தழகு, இளைஞர் அணி அமைப்பாளர் பாண்டியன், கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், வட்டச் செயலாளர் மாணிக்கம், கவுன்சிலர் வெள்ளைச்சாமி, ஒன்றிய பிரதிநிதி முத்து, தகவல் தொழில்நுட்ப அணி முருகேசன், மாணவரணி அமைப்பாளர் பாஸ்கரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வீரமணி மற்றும் ஒன்றிய பேரூர் நகர நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.