உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரிகள்.

மீன் கடைகளை அகற்றுவதை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம்

Published On 2022-07-10 09:03 GMT   |   Update On 2022-07-10 09:03 GMT
  • மீன் கடைகளை அகற்றுவதை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம் நடைபெற்றது.
  • அனுமதி இன்றி வீதிகளில் செயல்படும் மீன் கடைகளை அகற்ற 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை, 48 காலனி, ெரயில்வே பீடர் ரோடு, மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக காவல்துறைக்கும், நகராட்சி அலுவலகத்திற்க்கும் புகார்கள் வந்தன.

இதனை அடுத்து சிவகங்கை நகர் மன்ற தலைவர் ஆனந்த் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சிவகங்கை வீதிகளில் அனுமதியின்றி செயல்படும் மீன் கடைகளை அகற்ற உத்தரவிட்டனர். நகராட்சி பணியாளர்கள் வீதிகளில் செயல்படும் மீன்கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த நகராட்சி தலைவர் ஆனந்த் சம்பவ இடத்திற்கு வந்து மீன் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அனுமதி இன்றி வீதிகளில் செயல்படும் மீன் கடைகளை அகற்ற 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. வரும் காலங்களில் சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட மீன் மார்க்கெட்டில் மட்டுமே மீன் கடைகள் செயல்படும் என நகரசபை தலைவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News