உள்ளூர் செய்திகள்

விழாவில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு

Published On 2023-06-07 08:44 GMT   |   Update On 2023-06-07 08:44 GMT
  • ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளிப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
  • பொதுமக்கள் சிகிச்சை பெற உரிய வசதிகள் உள்ளன.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லஞ்செட்டி ஊரணி, கழனிவாசல் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நலவாழ்வு மையத்தில் அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷாஅஜித், மாங்குடி எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.

விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

பொதுமக்களின் உடல் நலனை பேணி காத்திடும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்கள் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

புதிதாக திறக்கப்பட்டுள்ள நலவாழ்வு மையத்தில் பொதுமக்கள் சிகிச்சை பெற உரிய வசதிகள் உள்ளன. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தாய்மார்க ளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 5 பேருக்கு மருந்து பெட்ட கங்களையும் அமைச்சர் வழங்கினார்.

இதில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) விஜய்சந்திரன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையர் வீரமுத்து, காரைக்குடி நகராட்சி நகர்நல அலுவலர் திவ்யா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News