உள்ளூர் செய்திகள்

டீக்கடைக்காரர் சாவில் கந்துவட்டி கும்பலை பிடித்து போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-02-22 14:34 IST   |   Update On 2023-02-22 14:34:00 IST
  • டீக்கடைக்காரர் சாவில் சந்தேகம் ஏற்பட்டதால் கந்துவட்டி கும்பலை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
  • விசாரணைக்கு பின் திருநாவுக்கரசு சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

தேவகோட்டை

தேவகோட்டை திருவேகம்புத்தூர் அருகே ஆந்தகுடியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது45). இவர் ஒத்தக்கடை பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

தொழில் நிமித்தம் காரணமாக கந்து வட்டி கொடுப்பவர்களிடம் திருநாவுக்கரசு கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் பணத்தை சரியாக செலுத்தாத காரணத்தால் அவருக்கு கந்துவட்டிக்காரர்களால் தொல்லை அதி கரித்துள்ளது.சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு திருநாவுக்கரசு வீட்டுக்கு சென்று விட்டார். இதை கண்டுபிடித்து அங்கு சென்ற கந்துவட்டிக்கா ரர்கள் திருநாவு க்கரசுவை மிரட்டியதாக கூறப்ப டுகிறது.

இந்நிலையில் திருநா வுக்கரசு விளங்காட்டூர் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. இதுகுறித்து திருநாவுக்கரசின் தந்தை அழகர் திருவேகம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது வீட்டுக்கு 3 பேர் காரில் வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருநாவுக்கரசை அழைத்துச் சென்றதாகவும், அவர்கள்தான் தனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருப்பார்கள் என்று சந்தேகம் இருப்பதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். திருநாவுக்கரசை வீட்டிலிருந்து அழைத்துச்சென்ற கந்துவட்டி கும்பலை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின் திருநாவுக்கரசு சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

Tags:    

Similar News