உள்ளூர் செய்திகள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரங்கில் நடந்த மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசியபோது எடுத்த படம். 

மாணவ-மாணவிகள் பண்பாட்டின் பெருமைகளை அறிய வைக்கும்

Published On 2023-02-17 08:27 GMT   |   Update On 2023-02-17 08:27 GMT
  • மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது.
  • மாணவ-மாணவிகள் பண்பாட்டின் பெருமைகளை அறிய வைக்கும்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரங்கில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது.

நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைகளாகிய கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது என்பது ஆரோக்கியமான எதிர்கால சமூக கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும்.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழ் மரபும், அதன் நாகரீகம் குறித்தும் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, பண்டையகால தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கான அடை யாளங்களை வெளிக் கொண்டு வரும் வகையில் தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில்

முனைவுக்கான முன்னெடுப்புகள் மற்றும் வாய்ப்புகள், கல்விப்புரட்சி மற்றும் அதன் திட்டங்கள், அதனை செயல்படுத்தும் முறைகள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு திறமை மிக்க சொற்பொழிவாளர்களை கொண்ட மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி இங்கு நடைபெற்று வருவது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய ஒன்றாகும். இதில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் இங்கு வழங்கப்பட உள்ளது.

இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு பண்பாட்டிற்கும் எதிர்காலத்திற்கும் வழிகாட்டிடும் வகையில் அடிப்படையாகத் திகழும் நிகழ்ச்சியின் மூலம் சிறந்த சொற்பொழிவாளர்கள் வாயிலாகஎடுத்துரைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி மாபெரும் தமிழ் கனவினை நனவாக்குகின்ற வகையில் மாணவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களை சார்ந்தவர்களும் எடுத்துரைத்து பயன்பெறசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி தமிழ் இணைய கல்விக்கழக ஆய்வு வளமையர் கே.டி.காந்திராஜன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சொற்பொழிவாளர்கள் பேராசிரியர் அருணன் மற்றும் சிவராஜா, ராம நாதன் காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ் துறைத்தலைவர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News