உள்ளூர் செய்திகள்
முத்து வடுகநாத சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
- சிங்கம்புணரி முத்து வடுகநாத சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
- பால்குடம் எடுத்து வந்து கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வணிகர் நல சங்கத்தின் சார்பாக 82-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து பக்தர்கள் சித்தர் முத்துவடுகநாதருக்கு அபிஷேகம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து பெரியகடை வீதி, நான்கு முனை சந்திப்பு சாலை, வேங்கைபட்டி சாலை வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து கோவிலை சென்றடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வணிகர் நலச்சங்க தலைவர் வீரபாண்டியன், செயலாளர் வாசு, திருமாறன், பொருளாளர் பாப்பா கணேசன், சரவணன், பாலன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.