முகாமில் தையல் பயிற்சி பெறுவதற்கான சான்றிதழ்களை அமைச்சர் பெரியகருப்பன் நரிக்குறவ இனத்தை சேர்ந்த பெண்களுக்கு வழங்கினார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தமிழரசி எம்.எல்.ஏ., உள்ளனர்.
வேலை தேடும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாம்
- வேலை தேடும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாமை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
- இளைஞர் திறன் திருவிழாவில் அதிகளவில் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் படித்த வேலை தேடும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இளைஞர் திறன் பயிற்சி தொடக்கவிழா நடந்தது.
பயிற்சி அளிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். மானா மதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:-
பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற இளை ஞர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் கல்வித்த குதிக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பினை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து இளைஞர் திறன் திருவிழாவை மாநிலம் முழுவதும் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.
இளைஞர்கள் எந்தத்து றையில் ஆர்வமுள்ளவர்கள் என்பதை அறிந்து, அவர்க ளின் கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல் பயிற்சி அளிக்க 23 பதிவு பெற்ற நிறுவனங்களின் மூலம் 1,750 இளைஞர்கள் பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத்து றையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளைஞர் திறன் திருவிழாவில் அதிகளவில் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல் இதில் பங்கு பெற்றுள்ள நிறுவனங்களின் வாயிலாக தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) வானதி, நகர்மன்றத் தலைவர்கள் துரைஆனந்த் (சிவகங்கை), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), லதாஅண்ணாத்துரை (மானாமதுரை), மாவட்ட கவுன்சிலர்கள் செந்தில்குமார், சாந்தா சகாயராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.