உள்ளூர் செய்திகள்

காளையார்கோவிலில் அறிவியல் இயக்க கொண்டாட்டம்

Published On 2023-05-04 08:18 GMT   |   Update On 2023-05-04 08:18 GMT
  • காளையார்கோவிலில் அறிவியல் இயக்க கொண்டாட்டம் நடந்தது.
  • செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் துரை நன்றி கூறினார்.

காளையார்கோவில்

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த திருவிழா மண்டல, ஒன்றிய அளவில் மாவட்டங்கள் தோறும் நடைபெறுகிறது.

ஒன்றிய அளவில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கும், தன்னார்வலர் களுக்கும், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கும் இது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 350 இடங்களில் இது நடைபெற உள்ளது.

அதன் தொடக்கமாக சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உத்தரவின் பேரில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் சேவல் புஞ்சை நடுநிலைப்பள்ளியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர்லெமாயூ தலைமையில் ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கஸ்தூரிபாய் முன்னிலையில் நடந்தது.

அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் ஆரோக்கியசாமி. ஆயிரம் ஆயிரம் அறிவியல் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கினார். இதில் அந்த பகுதி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் துரை நன்றி கூறினார்.

Tags:    

Similar News