உள்ளூர் செய்திகள்

சிவகங்கையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரு பயனாளிக்கு தீர்ப்பின் நகலை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய் பிரியா வழங்கினார்.

பயனாளிகளுக்கு ரூ.4.35 கோடி நிவாரணம்

Published On 2022-06-27 08:01 GMT   |   Update On 2022-06-27 08:01 GMT
  • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு ரூ.4.35 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
  • தன்னார்வ சட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 15 மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) அமைக்கப்பட்டன.

இதையடுத்து மாவ ட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின் பேகம், குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் சத்திய நாராயணன், மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 71 குற்றவியல் வழக்குகளும், 86 காசோலை மோசடி வழக்குகளும், 262 வங்கிக் கடன் வழக்குகளும், 198 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், மின்வாரியம் சம்மந்தப்பட்ட வழக்குகள் 1, 37 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 171 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 981 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 1807 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன.

இதில் 1066 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.3 கோடியே 2 லட்சத்து 24 ஆயிரத்து 399 வரையில் வழக்காடிகளுக்கு நிவாரணமாக கிடைத்தது. அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 450 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 192 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 33 லட்சத்து 32 ஆயிரத்து 50 வரையில் வங்கிகளுக்கு வரவானது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிர்வாக உதவியாளர்கள், இளநிலை நிர்வாக உதவியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர். வழக்காடிகள் திரளாக கலந்து கொண்டு தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர். தன்னார்வ சட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News