உள்ளூர் செய்திகள்

காயங்களுடன் இருந்த வெளிநாட்டு பறவை மீட்பு

Published On 2023-04-20 13:36 IST   |   Update On 2023-04-20 13:36:00 IST
  • காயங்களுடன் இருந்த வெளிநாட்டு பறவை மீட்கப்பட்டது.
  • அவருக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் குதிரைப்பாதை சாலை அருகே கழிவு நீர் கால்வாயில் ஒரு வெளிநாட்டு பறவை காயங்களுடன் நின்று கொண்டிருந்தது. அதனை கண்ட சமூக ஆர்வலர் அய்யப்பன் அதனை மீட்டு தேவகோட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ரத்த காயங்களுடன் இருந்த அந்த பறவைக்கு மருத்துவர் கவீன் சிகிச்சை அளித்தார். இந்த பறவை பற்றி மருத்துவர் கூறுகையில், பாலைவன பகுதிகளை தவிர அனைத்து இடங்களிலும் இதுபோன்ற பறவைகளை காணலாம். இமயமலைக்கு வடக்கே ஆசியாவிலும், இந்தோனேசியா மற்றும் சில பசிபிக் தீவுகளிலும் இந்த பறவை காணப்படும் என்றார். இந்த பறவையை மீட்டு சிகிச்சை அளித்து வனத்துறை அலுவலர் சங்கையாவிடம், சமூக ஆர்வலர் அய்யப்பன் ஒப்படைத்தார். அவருக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News