உள்ளூர் செய்திகள்

நவராத்திரி விழா தொடக்கம்

Update: 2022-09-27 08:23 GMT
  • மானாமதுரை கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
  • இங்கு சித்திரை, ஆடி மற்றும் நவராத்திரி விழாக்கள் நடைபெறும்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றுகரையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோமநாதர் கோவில் உள்ளது. இங்கு சித்திரை, ஆடி மற்றும் நவராத்திரி விழாக்கள் நடைபெறும்.

சாரதா நவராத்திரி விழா நேற்று இரவு தொடங்கியது. வருகிற 5-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.அம்மன் சன்னதியில் அமைக்கப்பட்ட கொலு பொம்மைகளை ஏராள மான பக்தர்கள் பார்வையிட்டனர்.

மானாமதுரை ஆதனூர் சாலையில் உள்ள நலம்தரும் சீரடிபாபா கோவிலில் நவராத்திரி உற்சவவிழா தொடங்கியது. வருகிற 5-ந்தேதி கலசபூஜை, வித்யாரம்பம், அன்னதானம் நடைபெறுகிறது. மெயின் பஜாரில் உள்ள தியாகவிநோதப் பெருமாள் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாதொடங்கியது.

இதில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. வருகிற 5-ந்தேதி புதிய குதிரை வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags:    

Similar News