உள்ளூர் செய்திகள்

சரஸ்வதி ஆரம்ப பள்ளி ஆண்டு விழா

Published On 2023-04-28 08:02 GMT   |   Update On 2023-04-28 08:02 GMT
  • காரைக்குடி சரஸ்வதி ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
  • ஆசிரியைகள் தமிழ்செல்வி, ஹேமலதா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

காரைக்குடி

காரைக்குடி முத்துப் பட்டினம் சரஸ்வதி ஆரம்பப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஆசிரியை ஜானகி தேவி வரவேற்றார். தலைமை ஆசிரியை மீனாள் தலைமை தாங்கினார்.

பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் பிரீத்தா, துணை தலைவர் அஜீஸா முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட அளவிலான ரீடிங் மராத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற இந்த பள்ளியின் முன்னாள் மாணவி மதிசாய்ஸ்ரீ பங்கேற்று பேசினார். இவர் மத்திய அரசின் என்.எம்.எம்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வி ஊக்கத்தொகை ரூ.48ஆயிரம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் மாணவ மாணவிகளின் நடனம், மாறுவேடப் போட்டி உள்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் தமிழ்செல்வி, ஹேமலதா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News