உள்ளூர் செய்திகள்
அடிக்கல் நாட்டு விழாவில் தமிழரசி எம்.எல்.ஏ. கலந்து கொண்டபோது எடுத்த படம்.
பால்குளிரூட்டும் நிலையம் அடிக்கல் நாட்டு விழா
- திருப்புவனம் அருகே பால்குளிரூட்டும் நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- தமிழரசி எம்.எல்.ஏ. உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ரூ. 16 லட்சம் ஒதுக்கினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் உள்ள திருப்புவனம் அருகே கீழராங்கியம் கிராமத்தில் கிராமப்புற பெண்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் பால் குளிரூட்டும் நிலை யத்திற்கான அடிக்கல் நாட்டினர்.
விழாவில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன், திருப்புவனம் கூட்டுறவு பால்பண்ணை செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் நாகூர்கனி, ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆவின் நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.