உள்ளூர் செய்திகள்

தேசிய காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் கால்நடைகளை காப்பீடு செய்யலாம்

Published On 2022-11-21 07:00 GMT   |   Update On 2022-11-21 07:03 GMT
  • தேசிய காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் கால்நடைகளை காப்பீடு செய்யலாம்.
  • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்ட வேளாண் குடிமக்களின் கால்நடை செல்வங்களை பாதுகாக்க 2022-23-ம் ஆண்டிற்கான தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ் தங்கள் கால்நடைகளை காப்பீடு செய்து பயன்பெறலாம்.

1100 அலகுகள் குறியீடாக பெறப்பட்டுள்ள இந்த மாவட்டத்தில் விருப்பம் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கால்நடைகளை அரசு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்து வரை அணுகி தங்கள் கால்நடைகளை காப்பீடு செய்து கொள்ளலாம்.

அரசு மானியமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு காப்பீடு சந்தாத்தொகையில் 70 சதவீதம் மானியமும் பொதுப் பிரிவினர்களுக்கு 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொருத்த ப்படும். காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறக்க நேரிட்டால், கால்நடை உதவி மருத்துவரால் காதுவில்லைக்குரிய இறந்த கால்நடையை பரிசோதனை செய்து அதற்கான பிரேத பரிசோதனை சான்றிதழுடன் காப்பீடு நிறுவனத்தில் இருந்து காப்பீடு தொகை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டம் தொடர்பான தகவல்களை சிவகங்கை, காரைக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்களின் கைப்பேசி எண்கள்: 94450 32581, 94450 32556 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News