முகாமில் கலெக்டர் ஆஷா ஆஜித் பேசினார்.
குடும்ப நல விழிப்புணர்வு முகாம்
- சிங்கம்புணரியில் குடும்ப நல விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பிரான்மலை ஆரம்ப சுகாதார மையத்தின் சார்பாக உலக மக்கள் தொ கை தினத்தை முன்னிட்டு இளம் தாய்மார்களுக்கான சிறப்பு குடும்ப நல விழிப்பு ணர்வு மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் கலந்து கொண்டு இன்றைய தாய்மார்களிடம் தற்காலிக குடும்ப நலம் மற்றும் நிரந்தர குடும்ப நல முறை களுக்கான வழிமுறை பற்றியும் எடுத்து ரைத்தார். மேலும் குடும்ப கட்டுப்பாடு சாதனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களிடம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டு மென கேட்டுக் கொண்டார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். குடும்ப நல துணை இயக்குனர் மருத்துவர் தர்மர், துணை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் விஜய் சந்திரன், முன்னிலை ஏற்றனர்.
சிங்கம்புணரி வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, சிங்கம்புணரி பேரூ ராட்சி சேர்மன் அம்பல முத்து வார்டு கவுன்சிலர் மணி சேகர், மக்கள் கல்வி மற்றும் தகவல் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், மாவட்ட நலக் கல்வி விரி வாக்க அலுவலர் மதி அரசன், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் சிங்கம் புணரி வட்டாட்சியர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சத்திய நேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.