உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

Published On 2022-12-04 12:28 IST   |   Update On 2022-12-04 12:28:00 IST
  • அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ள விசாலை யன்கோட்டை, கீழக்கோட்டை, சொக்கநாதபுரம், பாகனேரி, நகரம்பட்டி, பனங்காடி, மல்லல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் 13 பள்ளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறையும், பல்வேறு பள்ளிகளுக்கு ரூ.90ஆயிரம் மதிப்பில் உபகரணங்களை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

இதை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வருகிற அரையாண்டு தேர்வில் 1 முதல் 12 வகுப்பு வரை முதலிடம் பிடிக்கும் மாணவர்களை தனது சொந்த செலவில் ஆசிரியர்களுடன் கல்வி சுற்றுலாவாக சட்டமன்றத்திற்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.

இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஸ்டீபன்அருள்ராஜ், பழனிசாமி, சிவாஜி, கோபி, காளையார் கோவில் ஒன்றிய தலைவர் ராஜேசுவரி கோவிந்தராஜன், கல்லல் தெற்கு ஒன்றிய செயலாளர் சேவியர் தாஸ், தேவதாஸ், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சதீஸ்பாலு, மாவட்ட பேரவை துணை செயலாளர் மாரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News