உள்ளூர் செய்திகள்

சிவகங்கையில் தேசிய மக்கள் நீதிமன்றம் போக்சோ நீதிபதி சரத்ராஜ் தலைமையில் நடந்தது. அருகில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளா்-சார்பு நீதிபதி பரமேசுவரி மற்றும் பலர் உள்ளனர்.

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6 வழக்குகள் முடித்து வைப்பு

Published On 2023-03-12 08:32 GMT   |   Update On 2023-03-12 08:32 GMT
  • தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
  • பரமேசுவரி வழிகாட்டுதலின்படி பணியாளர்கள் செய்திருந்தனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 6 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 65 லட்சத்து 60 ஆயிரம் வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டு தலின்படியும் தலைவர்-முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா வழிகாட்டுதலின் படியும் சிவகங்கை மாவட்டத்தில் 3 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை நீதிமன்றங்களில் போக்சோ நீதிபதி சரத்ராஜ், சார்பு நீதிபதிகள் சுந்தரராஜ், கீதா, வக்கீல்கள் ராமலிங்கம், சவுந்திரபாண்டியன், குருமூர்த்தி. சேது ராமச்சந்திரன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 102 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 6 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது. இதன்மூலம் ரூ. 65 லட்சத்து 60 ஆயிரம் வரை வழக்கா டிகளுக்கு கிடைத்தது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி வழிகாட்டுதலின்படி பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News