உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த நிலையில் காணப்படும் மின்வாரிய அலுவலகம்

பாழடைந்து கிடக்கும் பூவந்தி மின்வாரிய அலுவலகம்

Published On 2023-10-12 09:29 GMT   |   Update On 2023-10-12 09:29 GMT
  • பூவந்தி மின்வாரிய அலுவலகம் பாழடைந்து கிடக்கிறது.
  • மின்வாரிய அலுவலகத்தை மாற்றி புதிய கட்டிடத்தில் இயங்க செய்ய வேண்டும்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா உள்ளது பூவந்தி. இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தின் சுவர்களில் சிமெண்ட் பூச்சு கள் உடைந்து பாழடைந்து காணப்படுகிறது. இந்த அலுவலகத்தில் மின் இணைப்பும் சரியில்லாமல் உள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் அய்யம் பாண்டி கூறியதாவது:-

பூவந்தி மின்வாரிய அலுவலகம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதை சரி செய்ய வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளேன்.

பூவந்தியில் உள்ள மின்வாரிய அலுவலகம் இப்பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரத்து 500 இணைப்பு களுக்கு சேவையாற்றி வரு கிறது. இந்த நிலையில் மின்வாரிய அலுவலகம் பழுதடைந்து பாழடைந்து கிடக்கிறது. இந்த அலுவலகத்தில் உள்ள மின்விளக்குகள் எரிவது இல்லை. இதனால் அலுவலகம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இங்கு மின்வாரிய ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது.வயர்மேன் 5 பேர், உதவி யாளர் 5 பேர், போர்மேன் 1, கமர்சியல் அசிஸ்டென்ட் ஒருவர், ஐ.ஏ. என ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதன் காரணமாக முழுமையாக சேவையாற்ற முடியாமால் இங்குள்ள ஊழியர்கள் திணறி வருகின்றனர். இதனால் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மின்தடை ஏற்படும்போது ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பாதிப்பை உடனடியாக சரி செய்ய முடியவில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். சாரல் மழைக்கே மின்சாரம் துண்டிக்கப்படு கிறது. இந்த பிரச்சினைகளை உடனடியாக சரி செய்து மின்வாரிய அலுவலகத்தை மாற்றி புதிய கட்டிடத்தில் இயங்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News