சுகாதார வளாக கட்டுமான பணியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் காரைக்குடி நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன் உள்பட பலர் உள்ளனர்.
ரூ.24.55 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
- ரூ.24.55 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.
- சுகாதார வளாகம் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரைக்குடி நகராட்சிக் குட்பட்ட செஞ்சை, முத்துப் பட்டினம் ஆகியப்பகுதி களில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுமானப் பணிகளையும், நமக்கு நாமே திட்டம் 2021-22-ன் கீழ் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணி களையும் கலெக்டர் செய் தார்.
இறகுப்பந்து உள்விளை யாட்டு அரங்கம் கட்டும் பணிகளையும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் பருப்பு ஊரணி, சோமு பிள்ளை தெரு, கணேசபுரம் ஆகிய இடங்களில் கட்டப் பட்டு வரும் சுகாதார வளா கம் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.30 கோடி மதிப் பீட்டில் அறிவுசார் மையம் கட்டுமான பணிகள் மற்றும் எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணிக ளையும், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 14 நகராட்சி பள்ளிகளில் 1,631 குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.18.57 லட்சம் மதிப்பீட்டில் செயல் படுத்தப்பட்டு வரும் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டப்பணிகளை யும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது காரைக்குடி நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், நகராட்சிப் பொறியாளர் கோவிந்தராஜன், நகர்நல அலுவலர் திவ்யா மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.