உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
- திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இதில் 300-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை- சீதையம்மாள் கல்லூரியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் பேரணி நடத்தினர். துணை முதல்வர் சூசைமாணிக்கம் முன்னிலையில் வட்டாட்சியர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார். துணை வட்டாட்சியர் ராஜா முகமது பங்கேற்றார். நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் கல்லூரியில் இருந்து பேரணியாக மதுரை ரோடு, அண்ணா சிலை, காந்தி சிலை, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள்-பேராசிரியர்கள் கார்த்திகேயன், நாகராஜன், மாரிக்கண்ணு ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். இதில்
300-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.