உள்ளூர் செய்திகள்

காஞ்சிரங்கால் ஊராட்சியில் செஸ் போட்டி விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்ச்சி நடந்தது.

செஸ் விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்ச்சி

Published On 2022-07-22 07:59 GMT   |   Update On 2022-07-22 07:59 GMT
  • செஸ் விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்ச்சி நடந்தது.
  • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் பார்வையிட்டார்.

சிவகங்கை

44-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் மகளிர் சுய உதவிகுழுவினர்கள் கூட்டாக இணைந்து ரங்கோலி கோலமிடல் நிகழ்ச்சியை நடத்தினர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 445 ஊராட்சிகளிலும் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செஸ் போட்டியின் சிறப்பு அம்சங்கள் குறித்து வண்ண கோலங்களால் விளக்கப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் பார்வையிட்டார். மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் வானதி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன், உதவி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News