உள்ளூர் செய்திகள்

அதிக மகசூல் பெற்ற 3 பட்டுக்கூடு விவசாயிகளுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி ரொக்கப்பரிசுக்கான காசோலைகளை வழங்கினார்.

அதிக மகசூல் பெற்ற 3 பட்டுக்கூடு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு

Published On 2023-03-22 08:37 GMT   |   Update On 2023-03-22 08:37 GMT
  • சிவகங்கை மாவட்டத்தில் அதிக மகசூல் பெற்ற 3 பட்டுக்கூடு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு கலெக்டர் வழங்கினார்.
  • விவசாயி ராமையாவுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 2022-23-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறப்பான முறையில் பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்ற 3 பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசுத்தொகைக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விவசாயிகளுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி ரொக்கப்பரிசுக்கான காசோ லைகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மேம்பாட்டு வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அதில், விவசாயத்திற்கு தனிகவனம் செலுத்தி விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதன் அடிப்படையில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் காளையார்கோவில் வட்டம், சாத்தனி கிராமத்தில் விவசாயி குமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிட்டு பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்றதற்காக முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், சிவகங்கை வட்டம், கூத்தாண்டன் கிராமத்தில் விவசாயி அமுதாராணி 2 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிட்டு பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு வளர்த்து அதிக மகசூல் பெற்றதற்காக 2-ம் பரிசு ரூ.20ஆயிரமும், காளையார்கோவில் வட்டம், சாத்தனி கிராமத்தில் விவசாயி ராமையாவுக்கு 3-ம் பரிசு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது என்றார்.

அப்போது பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் முத்துக்குமார் உடனிருந்தார்.

Tags:    

Similar News