பாலாலய பூஜையில் பங்கேற்றவர்கள்.
சொர்ணகாளீஸ்வரர் கோவில் பாலாலய பூஜை
- திருப்பத்தூர் அருகே சொர்ணகாளீஸ்வரர் கோவில் பாலாலய பூஜை நடந்தது.
- வேதாச்சார்யார்கள் யாக பூஜைகள் நடத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள தென்மாபட்டு பகுதியை சேர்ந்த வெள்ளாஞ்செட்டியாருக்கு சொந்தமான கண்டரமாணிக்கம் ஊராட்சியில் சாத்தனூர் பகுதியில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவள்ளியம்மாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை முன்னிட்டு பாலாலய தச்சு என்னும் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள் தலைமையில் வேதாச்சார்யார்கள் யாக பூஜைகள் நடத்தினர். அதனைத்தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அரியக்குடி கணேசன் சபதி, கோவில்திருப்பணி குழு தலைவர் காரைக்குடி ராமச்சந்திரன், திருப்பத்தூரை சேர்ந்த வெள்ளாஞ் செட்டியார் வகையறா உறவின்முறை தலைவர் அனந்தராமன் மற்றும் கோவில் திருப்பணி குழு செயலாளர்களான சண்முகநாதன், முருகேசன், சம்பத் மற்றும் நிர்வாக பொறுப்பாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.மேலும் பாலாலய நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.