உள்ளூர் செய்திகள்
திருவிழா தகராறில் மகனை மிரட்ட தந்தை மீது தாக்குதல்
- திருவிழா தகராறில் மகனை மிரட்ட தந்தை மீது தாக்குதல் நடத்தினர்.
- சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை மேற்கொண்டு வருகி–றார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள பெருமாள் கோவில் பகுதி–யைச் சேர்ந்தவர் பாக்கிய–ராஜ். இவரது 17 வயது மகனுக்கும், சிவகங்கை ஆவ–ரங்காடு பகுதியைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயது சிறு–வர்களுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடை–பெற்ற பிள்ளை வயல் காளி–யம்மன் கோவில் திருவிழா–வில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து நேற்று 15 மற்றும் 16 வயது சிறுவர்கள் பாக்கியராஜின் வீட்டுக்கு வந்து அவரது மகன் எங்கே என கேட்டுள்ளனர். அதற்கு பாக்கியராஜ் தெரியாது என்று கூறியுள்ளார். இத–னால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள் பாக்கிய–ராஜை அவதூறாக பேசியதோடு, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றனர்.
இதுகுறித்து பாக்கியராஜ் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசா–ரணை மேற்கொண்டு வருகி–றார்.