உள்ளூர் செய்திகள்

போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்த 3 பேர் கைது

Published On 2022-08-11 08:08 GMT   |   Update On 2022-08-11 08:08 GMT
  • போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்த 3 பேர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் கைது செய்து நீதிமன்றம் மூலம் சிறையில் அடைத்தனர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இடையன்வயல் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் காளிமுத்து (வயது 39). இவர் வேலாயுதபட்டினம் காவல் நிலையத்தில் தனது தந்பெதையரில் உள்ள நிலத்தை போலி ஆவணங்களை தயார் செய்து பத்திர பதிவு செய்துள்ளனர் என்று புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் உத்தரவின்பேரில் தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன், சார்பு ஆய்வாளர்கள் மருது, முத்துபாலு, ராமசந்திரன், காவலர்கள் இளங்கோ, செந்தாமரைக் கண்ணன் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில் ஆறாவயல் பெரியசாமி மகன் ராமநாதன் (32), அச்சணி பெரியசாமி மகன் கருப்பையா (65), ஊரணிக்கோட்டை பனங்குளம் வெங்கடாசலம், இடத்தை வாங்கிய காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பீர் முகமது மகன் நயினா முகமது, பத்திர எழுத்தாளர் அலுவலகத்தில் பணிபுரியும் மாதவன் மனைவி புவனேசுவரி, கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் கல்லல் இந்திர நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் காளிமுத்து அப்பா வெங்கடாசலம் பெயரில் உள்ள 5 ஏக்கர், 22 செண்டு நிலத்துக்கு போலி ஆவணங்களை தயார் செய்து பத்திரப்பதிவு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் முதல் கட்டமாக ராமநாதன், கருப்பையா, கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றம் மூலம் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News