உள்ளூர் செய்திகள்

மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அருகில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, கார்த்தி சிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி மற்றும் பலர் உள்ளனர்.

1,461 மகளிர் குழுக்களுக்கு ரூ.84.13 கோடி கடனுதவி

Published On 2022-12-30 08:41 GMT   |   Update On 2022-12-30 08:41 GMT
  • 1,461 மகளிர் குழுக்களுக்கு ரூ.84.13 கோடி கடனுதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
  • அதனை தொடர்ந்து சிவகங்கையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் விழா நடந்தது.

சிவகங்கை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து சிவகங்கையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் விழா நடந்தது.

கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 1,4611 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.84.13 கோடி கடனுதவிகளை வழங்கினார்.பின்னர் அவர் பேசியதாவது:-

சுயஉ தவிக்குழுக்கள் அமைத்து சுழல்நிதி கடன் திட்டத்தை வழங்கி பெண்களின் வாழ்வாதா ரத்தை உயர்த்தியவர் மகளிர் குழு பயன்பெறும் வகையில் குழு உறப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். அந்த அளவிற்கு சுயதொழில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

பொதுவாக ஒரு வீட்டில் குடும்பத்தலைவி போதிய வருவாய் ஈட்டும் நிலையில் இருந்தால்தான், அந்த குடும்பம் கடனின்றி சிறப்பாக வழிநடத்தி செல்ல முடியும். பெண்கள் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு எத்தகைய திட்டங்களை பெற்று பயன்பெற முடியுமோ அத்தகைய திட்டங்களை மேற்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் ரவிச்சந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News