புகையிலை பொருட்கள் விற்ற மற்றும் சூதாடிய 7 பேர் கைது
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்
சிவகங்கை
திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாஷ் மற்றும் போலீசார் சைனாபுரம், டி.புதூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டி கடையில் விற்பனை செய்த சைனாபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (46), டி.புதூர் பகுதியை சேர்ந்த மெஹாராஜிபேகம் (38) ஆகிய இருவரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெரிய கோட்டை புதைகுழி பகுதி அருகே பெரியகோட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம், புயல் ராமன், நேதாஜி, செல்வம், அழகன் ஆகிய 5பேர் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.