உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் ஆஷா அஜித், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் பயனாளிகளுக்கு பவர்டிரில்லர்களை வழங்கினர்.

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.65 லட்சம் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-07-13 07:29 GMT   |   Update On 2023-07-13 07:29 GMT
  • மக்கள் தொடர்பு முகாமில் ரூ.65 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • கலெக்டர், எம்.எல்.ஏ. பவர்டிரில்லர்களை வழங்கினர்.

மானாமதுரை

சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 124 பயனாளிகளுக்கு ரூ.64.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு வழங்கினர்.

இதில் 26 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து17ஆயிரத்து 119 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான உதவித் தொகை ஆணைகளும், பொது சுகாதாரத் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பீட்டில் மருந்து பெட்டகம் மற்றும் மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.58 ஆயிரத்து 550 மதிப்பீட்டில் சக்கர நாற்காலிகளும், 2 மகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டிலான மகளிர் குழுவுக்கான சுழல் நிதிக்கான ஆணையும், 02 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலான பவர்டி ரில்லர்களையும், தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 17 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 22 ஆயிரத்து 573 மதிப்பீட்டிலான கேசிசி கரும்பு கடனுதவிகளும், 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.28லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி, இணை இயக்குநர்கள் தனபாலன் (வேளாண்மைத் துறை), நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத் துறை) ஒன்றியக்குழு உறுப்பினர் ஈஸ்வரன், திருப்புவனம் வட்டாட்சியர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News