தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தி தருமபுரி மரபு சந்தையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.
தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
- இந்த கையெழுத்து இயக்கத்தை சித்த மருத்துவப் பேராசிரியர் மாதேஸ் தொடங்கி வைத்து கையெழுத்திட்டார்.
- தொடர்ந்து சந்தைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் இயற்கை மரபுப் பொருட்கள் விற்பனை யாளர்கள் ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர்.
தருமபுரி,
தமிழர் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் அதிகாரப்பூர்வமான ஆய்வு களை மேற்கொள்வதற்கு அரசுப் பல்கலைக்கழகம் அவசியம்.
இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவப் பல்கலைக்கழகம், ஹோமியோபதி மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆங்கில மருத்து வத்துக்கு ஏராளமான பல்கலைக்கழகங்கள் உள்ளன.
ஆனால், பல ஆயிரம் ஆண்டுகள் முந்தைய- தமிழ் மண்ணின் கலா சாரத்துடன் இணைந்த மூத்த மருத்துவ முறையான சித்த மருத்துவத்துக்கு இதுவரை பல்கலைக்கழகம் இல்லை.
இந்தக் குறையைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, நிதி ஒதுக்கீடும் செய்து நிலமும் தேர்வு செய்யப்பட்டு விட்டது.
ஆனால், சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவிற்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதனால் தமிழர்களின் நீண்டகாலக்கனவு தடைபட்டு நிற்கிறது.
எனவே, சித்த மருத்துவப்பல்கலைக்கழக சட்ட முன்வடிவில் கவர்னர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட்டு ள்ளது.
சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழு என்ற பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டு, மூத்த சித்த மருத்துவரும் உலகத் தமிழ் மருத்துவக் கழகத் தலைவருமான மைக்கேல் செயராசு, எழுத்தாளர் முத்துநாகு, செயல்பாட்டாளர் மணிகண்டன் ஆகியோர் மாநில ஒருங்கிணைப்பாள ர்களாக செயல்படு கின்றனர்.
இந்தக் குழுவினர் மூலம் தருமபுரி மாவட்டத்தில் ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் நேற்று தொடங்கியது. தருமபுரி தமிழர் மரபுச் சந்தையில் இந்த இயக்கம் தொடங்கியது.
இந்த கையெழுத்து இயக்கத்தை சித்த மருத்துவப் பேராசிரியர் மாதேஸ் தொடங்கி வைத்து கையெழுத்திட்டார்.
தொடர்ந்து சந்தைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் இயற்கை மரபுப் பொருட்கள் விற்பனை யாளர்கள் ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர்.
கையெழுத்து இயக்கத்தைத் தொடர்ந்து சந்தையில் மூத்த தமிழர் மருத்தும் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. இதில் டாக்டர் மாதேஸ் கலந்து கொண்டு பேசினார்.
இந்த கையெழுத்து இயக்கம் முடிக்கப்பட்டு அனைத்து கையெ ழுத்துக்கள் கொண்ட அறிக்கை கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரி வித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழர் மரபுச் சந்தை மற்றும் தருமபுரி மக்கள் மன்ற நிர்வாகிகள் உமா சங்கர், நிர்மல்குமார், சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.