உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ தினவிழா: கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்பு

Published On 2023-03-28 22:00 IST   |   Update On 2023-03-28 22:00:00 IST
  • தமிழர் பாரிம்பரிய சித்த மருத்துவங்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
  • விழாவில் திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அரசு மருத்துவமனை ஆயுஷ் சித்தா பிரிவு சார்பில், 6வது தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது., செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் அங்கிருந்த மூலிகை செடிகளின் கண்காட்சி, ஊட்டச்சத்து உணவு, மருத்துவ உபகரணங்கள், சித்தர் சிலைகள், கொரோனா தடுப்பு மருந்து, நோய் எதிர்ப்பு சக்தி நடவடிக்கை குறித்த வரைபடங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு தமிழர் பாரிம்பரிய சித்த மருத்துவங்கள் குறித்து கேட்டறிந்தார்.

விழாவில் திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், காஞ்சிபுரம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாசாமி, மாமல்லபுரம் ஆயுஷ் சித்தா பிரிவு மருத்துவர் வானதி நாச்சியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News