உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் மாசி மக பவுர்ணமி விழாவில் இருளர்களுக்கு சித்த மருத்துவ விழிப்புணர்வு
- இருளர்கள் ஒன்று கூடி அவர்களது குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டு வருகின்றனர்.
- ஆயுஷ் பிரிவு டாக்டர் வானதி நாச்சியார் அறிவுரைகள் வழங்கி நிலவேம்பு கஷாயம் வழங்கினார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் இருளர்கள் பங்கேற்கும் மாசிமக பவுர்ணமி விழா இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான இருளர்கள் ஒன்று கூடி அவர்களது குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டு வருகின்றனர்.
இவர்களிடையே தொற்று நோய் தடுப்பு, எதிர்ப்பு சக்தி, உடல் பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாமல்லபுரம் அரசு மருத்துவமனை ஆயுஷ் பிரிவு டாக்டர் வானதி நாச்சியார் அங்கு முகாமிட்டு அரிமா சங்கத்துடன் இணைந்து, அறிவுரைகள் கூறி நிலவேம்பு கஷாயம் வழங்கினார்.