உள்ளூர் செய்திகள்

டவுனில் இருந்து நெல்லை சந்திப்புக்கு சென்று வந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் - பொதுநலச்சங்கம் கோரிக்கை

Published On 2023-01-19 09:31 GMT   |   Update On 2023-01-19 09:31 GMT
  • நெல்லை மாநகரபகுதி மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்களும் சந்திப்பு சென்று அங்கிருந்து ரெயில் மூலம் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று வருகிறார்கள்.
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சந்திப்பு பஸ் நிலைய பணிகள் நடைபெறுவதால் தற்போது சந்திப்புக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

நெல்லை:

நெல்லை மாநகரில் சந்திப்பு பகுதி மிகவும் முக்கியமான இடமாக உள்ளது.

மாநகரபகுதி மட்டுமல்லா மல் பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்களும் சந்திப்பு சென்று அங்கிருந்து ரெயில் மூலம் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று வருகிறார்கள்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சந்திப்பு பஸ் நிலைய பணிகள் நடைபெறுவதால் தற்போது சந்திப்புக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

தென்காசி உள்ளிட்ட வழித்தட பஸ்கள் சந்திப்பு தேவர் சிலை அருகே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றது. பின்னர் பயணிகள் அங்கிருந்த சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் பயணிகள் சிரமத்தை போக்கும் வகையில் டவுன் சந்திப்பிள்யைார் கோவில் முக்கில் இருந்து புதிய பஸ்நிலையத்திற்கு 1டி என்ற எண் கொண்ட 3 பஸ்கள் இயக்கப்பட்டது.

இந்த பஸ் நயினார்குளம், எஸ்.என். ஹைரோடு, சந்திப்பு ரெயில் நிலையம் சென்று பின்னர் வண்ணார் பேட்டை வழியாக புதிய பஸ் நிலையம் சென்று வந்தது. இதனால் பயணிகள் பெரிதும் பயன்பெற்று வந்தனர்.

இந்நிலையில் தற்போது ஒரு மாதமாக இந்த பஸ் நிறுத்தப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி மீண்டும் இநத பஸ்சை இயக்க வேண்டும் என நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநலச்சங்க தலைவர் அய்யூப் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags:    

Similar News