உள்ளூர் செய்திகள்

வாறுகால் பணிகள் நடைபெறாமல் இருக்கும் காட்சி

நெல்லை எஸ்.என். ஹைரோட்டில் வாறுகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை

Published On 2022-11-16 09:23 GMT   |   Update On 2022-11-16 09:23 GMT
  • எஸ் .என். ஹைரோட்டில் இருபுறமும சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
  • மேல் மூடிகளை மூடும் வகையில் கான்கிரீட் அமைக்க கம்பிகள் மட்டும் கட்டப்பட்டுள்ளது

நெல்லை:

நெல்லை டவுன் ஆர்ச் முதல் சந்திப்பு மேம்பாலம் வரையிலும் எஸ் .என். ஹைரோட்டில் இருபுறமும சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக அந்த 2 பகுதியிலும் வாறுகால் அமைக்கும் பணி நடந்துவருகிறது.இந்நிலையில் சமீப காலமாக ஒரு சில இடங்களில் பாதி வாறுகால் பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாகவும், மீதி இடங்களில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி வியாபாரிகள் புகார் கூறி வருகின்றனர்.

வாறுகால் அமைப்பதற்காக இருபுறமும் கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு மேல் மூடிகளை மூடும் வகையில் கான்கிரீட் அமைக்க கம்பிகள் மட்டும் கட்டப்பட்டுள்ளதாகவும், வெகு நாட்களாகியும் அதன் மீது கான்கிரீட் கலவை போடப்படாததால் கடைகளுக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் கால்கள் இரும்பு கம்பிகளால் பதம் பார்க்கப்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்டுள்ள வாறுகால் பணிகளை விரைந்து முடித்து வியாபாரிகள் சிரமமின்றி வியாபாரம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News