உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

தச்சநல்லூர் பகுதியில் கழிவு நீரோடையை சுத்தம் செய்யும் பணி

Published On 2023-03-30 08:53 GMT   |   Update On 2023-03-30 08:53 GMT
  • சீனியப்பன் திருத்து பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.
  • கழிவு நீர் ஓடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாக துணை மேயருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் பகுதிக்கு உட்பட்ட 1-வது வார்டு சீனியப்பன் திருத்து பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. அப்போது தோண்டிய மணல்கள் கழிவு நீர் ஓடையில் விழுந்து அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி பொது மக்கள் துணை மேயர் கே.ஆர்.ராஜுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து துணை மேயர், மாநகராட்சி கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்று கூட்டு துப்புரவு பணி செய்து உடனடியாக பணியை முடிக்க உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் துப்புரவு பணி ஆய்வாளர் ஜானகிராமன், மேஸ்திரி முருகன் உள்ளிட்ட துப்புரவு பணியாளர்கள் 25 பேர் கொண்ட குழுவினர் உடனடியாக பணியை தொடங்கி சரி செய்தனர். 

Tags:    

Similar News