கழிவுநீர் சாலையில் ஓடுவதை படத்தில் காணலாம்.
திண்டுக்கல் பஸ்நிலையம் அருகில் சாலையில் ஓடும் கழிவுநீரால் தொற்றுநோய் அபாயம்
- ஏராளமானோர் இந்த சாலை வழியாகத்தான் தினமும் பயணித்து வருகின்றனர். இங்கு செயல்பட்டு வரும் கட்டண கழிப்பறையில் இருந்து பல நாட்களாக கழிவு நீர் வெளியேறி சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது.
- இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே ஸ்டாலின் காட்டேஜ் உள்ளது.இங்கு பல்வேறு மிக்சர் கடைகள், வக்கீல்கள் அலுவலகம், இலைக்கடை,மற்றும் குடியிருப்பு ஆகியவை உள்ளன. இதனால் ஏராளமானோர் இந்த சாலை வழியாகத்தான் தினமும் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு செயல்பட்டு வரும் கட்டண கழிப்பறையில் இருந்து பல நாட்களாக கழிவு நீர் வெளியேறி சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே சாலையில் ஓடும் கழிவுநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.